Page Loader
சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி
சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி

சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி

எழுதியவர் Nivetha P
May 18, 2023
06:18 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் அடுத்த மணமை அருகே சென்றப்பொழுது, அமைச்சரின் கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் இருந்த புதுமண தம்பதிகள் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில் கணவர் ஜான்சன் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த மாமல்லபுரம் காவல்துறையினர் அங்குச்சென்று ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருடைய மனைவி ரூத்பொன்செல்வி படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். கடலூரில் இருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஜான்சன் தனது மனைவியுடன் சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post