அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இதனால் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து, நகர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி, கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரிக்கொம்பன் யானை இடித்து விழுந்ததில், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த அமைச்சர் பெரியசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ₹5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.