
மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் தான் பெங்களூருவில் வீடு கிடைக்கவில்லை என்று ஐபிஎல் போட்டியின் போது போஸ்டர் வைத்து விளம்பரம் செய்த ஒரு இளைஞரின் பதிவு வைரலானது.
அதே போல மற்றொரு டிவீட்டும் இப்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம், நல்ல மதிப்பெண்கள் பெற்றால் தான் நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் வாங்க முடியும் என்று ஆண்டாண்டு காலமாக கூறப்படுவதுண்டு.
ஆனால், எவ்வளவு பெரிய நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் வேலை செய்தாலும், பள்ளியில் நல்ல மதிப்பெண் இல்லையென்றால் வீடு கிடைக்காது.
பெங்களூருவில் வீடு கிடைக்க வேறு சில தகுதிகளும் உள்ளன. டிவீட்டில் பகிரப்பட்ட வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட்டில் அதிர்ச்சியூட்டும் கான்வர்சேஷன் உள்ளது.
வீடு தேடிக் கொண்டிருக்கும் நபரிடம் அவரைப் பற்றிய ஒரு writeup, linkedin profile, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள், ஆகிய விவரங்களும் கோரப்பட்டன.
12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் மட்டும் வாங்கி இருந்ததால் அவருக்கு வாடகை வீடு நிராகரிக்கப்பட்டது!
பெங்களூருவில் நல்ல வீடு வாடகைக்கு கிடைக்க +12வில் 90% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்!
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"Marks don't decide your future, but it definitely decides whether you get a flat in banglore or not" pic.twitter.com/L0a9Sjms6d
— Shubh (@kadaipaneeeer) April 27, 2023