Page Loader
மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா 

மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா 

எழுதியவர் Sindhuja SM
Jul 10, 2024
12:50 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை BMW விபத்தை ஏற்படுத்தி ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா, விபத்தின் போது BMWவை ஓட்டியதை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. விசாரணையின் போது, ​​​​மிஹிர் ஷா விபத்துக்கு வழிவகுத்த தனது செயல்கள் மற்றும் அதற்கு பிறகு அவர் என்ன செய்தார் என்பதை விவரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார். இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டி இருக்கிறார்.

இந்தியா 

மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக வெளியான குற்றசாட்டை மறுத்தார் மிஹிர் ஷா 

அப்போது அவர் குடித்துவிட்டு வாகனம் ஓடியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதற்கிடையில், அவர் மது அருந்திய மதுபானக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களாக தலைமறைவாக இருந்த மிஹிர் ஷா நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் போது, அவர் MWவை ஓட்டியதை ஒப்புக்கொண்டார். ஆனால், தான் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில் தான் தலைமறைவானதாகவும் அவர் கூறியுள்ளார்.