
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை
செய்தி முன்னோட்டம்
ஹோலி பண்டிகைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரிப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் நேற்று(மார் 5) தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று கூறப்பட்டதை அடுத்து தமிழ்நாடு காவல்துறை, வணிக மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தில் பணிபுரியும் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகியது.
"பீகார் அரசின் அதிகாரிகள் குழு இன்று திருப்பூருக்கு வருகை தந்தது. சங்க உறுப்பினர்கள், தொழிலாளர் சங்கம் மற்றும் பிற சங்கங்கள் உட்பட அனைவருடனும் அவர்கள் விவாதித்துள்ளனர்." என்று திருப்பூர் மாவட்ட துணை ஆணையர் கூறியுள்ளார்.
திருப்பூர்
போலிச் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை
மேலும், ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதையும், மக்கள் பீதியடையாமல் இருக்க திருப்பூர் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் பீகார் அரசின் அதிகாரிகளிடம் காட்டியுள்ளோம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
"பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளால் வெளியேறுவதாக சில செய்திகள் பரப்பப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் ஹோலி கொண்டாட்டங்களுக்கு செல்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்," என்று ஆட்சியர் வினீத் மேலும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஷஷாங்க் சாய் கூறியதாவது: "போலிச் செய்திகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்கள் மற்றும் சேனல்கள் மீது மாவட்ட காவல்துறை நிர்வாகமும், நகர காவல் நிர்வாகமும் இணைந்து FIR பதிவு செய்துள்ளது."