Page Loader
மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா 
ராஜினாமா செய்த மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி

மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா 

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 08, 2023
09:30 am

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதை மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனமும் உறுதி செய்திருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக தங்களுடன் பயணித்து, தங்களது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஆனந்த் மகேஸ்வரியின் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்களும் புதிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய தலைவராக AWS இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனீத் சந்தோக் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட்

பதவி உயர்வு பெற்ற முக்கிய நிர்வாகிகள்: 

ஆனந்த மகேஸ்வரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வந்த இரினா கோஷ், நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொதுத்துறை வணிகத்தின் செயல்பாட்டு இயக்குநராக செயல்பட்டு வந்த நவ்தேஜ் பால், புதிய செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நவ்தேஜ் பால் விட்டுச் சென்ற இடத்தில் வெங்கட் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மைக்ரோசாஃப்டில் இணைவதற்கு முன்னதாக ஹனிவெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ஆனந்த் மகேஸ்வரி, 1996-ல் BIT-ல், பொருளியில் துறையில் முதுகலைப் பட்டமும், 1998-ல் அகமதாபாத் ஐஐஎம்மில் MBA பட்டமும் பெற்றவர். மேலும், கடந்த ஏப்ரலில் தான், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் 2023-24ம் ஆண்டிற்கான தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.