மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனைக் கொண்டாடும் விதமாக நேற்றும், இன்றும் பல்வேறும் நிகழ்ச்சிகளை நடைபெற்றிருக்கின்றன. 1873ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேட்டப்பாளையும் ரயில் நிலையமானது, 150 ஆண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், இன்று மலை ரயிலில் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி, கல்லாறு ரயில் நிலையம் வரை பயணித்து பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மாணவர்களை சேர்த்திருக்கிறது உதகை மலை ரயில். இந்தப் பயணத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் கொண்டாடியதுடன், பழங்கால ரயில் நிலையம் குறித்த தகவல்களையும் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம்:
மாணவர்கள் இலவசமாக மலை ரயிலில் அழைத்துச் சென்றதைத் தவிர்த்து, எட்டு கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. இந்த ஓட்டப்பந்தயத்தில், ரயில் நிலைய ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மேட்டுப்பாளையும் ரயில் நிலைய 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, 1897ம் ஆண்டு மேட்டுப்பாளையும் மற்றும் குன்னூர் இடையேயும் புதிய பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கோடைக் காலம் மற்றும் கடும் வெயில் காலங்களில் ஊட்டிக்குப் பயணிக்கவும், மலையிலிருந்து தேயிலையை கொண்டு வரவும் இந்தப் பாதையை அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.