Loading...
மீரட் புளூ டிரம் கொலை வழக்கு: கணவனைக் கொன்று பேரலில் அடைத்த மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை
இருவரையும் குற்றவாளிகள் என செப்டம்பர் 30 அன்று அறிவித்திருந்த நிலையில், தண்டனை விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன

மீரட் புளூ டிரம் கொலை வழக்கு: கணவனைக் கொன்று பேரலில் அடைத்த மனைவி, கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
05:09 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த அதிர்ச்சியளிக்கும் நீல நிற டிராம் கொடூரக் கொலை வழக்கில் , கணவனை கொன்று பேரலுக்குள் அடைத்த மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மீரட் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் மீரட் மாவட்ட நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா, இருவரையும் குற்றவாளிகள் என செப்டம்பர் 30 அன்று அறிவித்திருந்த நிலையில், தண்டனை விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னணி

வணிகக் கடற்படை அதிகாரி கொலை

வணிகக் கடற்படை அதிகாரியான சௌரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி, தனது பள்ளித் தோழனும், கள்ளக்காதலனுமான சாஹில் சுக்லாவுடன் இணைந்து கொடூரமாக கொலை செய்தார்.

கொலைக்குப் பிறகு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் சௌரப்பின் உடலை ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிராமிற்குள் வைத்துச் சீல் செய்து மறைத்து வைத்தனர்.

கடந்த 13 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில், 126 விசாரணைகள் மற்றும் 22 அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்படும் போது குற்றவாளிகள் இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ள உள்ளூர் சிறையில் இருந்து காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT