இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம்
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு வெளியே இன்று(மார்-27) மதியம் மாபெரும் போராட்டம் மற்றும் கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கர்நாடக அரசின் சமீபத்திய முடிவை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை புதிதாக பிரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுவரை SC/STக்கான 15% இடஒதுக்கீட்டில், 10% பஞ்சாரா சமூகத்திற்கு கிடைத்து வந்ததது. ஆனால், புதிதாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு 4% மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.