
மணிப்பூர் விவகாரம் - சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்புத்தெரிவித்து குகிப்பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியநிலையில், அது கலவரமாக மாறியது.
இதனிடையே குகி பழங்குடியினத்தினை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை.,30)சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ ஆலையம் அருகில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தியேந்தி தேவாலயம் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து,"மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை கண்டித்து தூய தாமஸ் ஆலையம் சார்பாக அனைத்து திருச்சபை மக்களும் மெழுகுவர்த்தி ஏற்றி எங்கள் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்"என்று தேவாலய பாதிரியார் பேட்டியளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தேவாலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்
#Watch | மணிப்பூர் கலவரத்தில், பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமையை கண்டித்து, சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை சிஎஸ்ஐ ஆலயத்தின் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி தேவாலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்! #SunNews | #ManipurViolence | #Chennai pic.twitter.com/6ufRaJ4onf
— Sun News (@sunnewstamil) July 30, 2023