
மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக இன்று(ஜூலை.,23) சென்னையில் தாய்மையினை அவமதிக்கும் செயலினை தடுக்க பாஜக.,அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து எம்.பி.கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எம்.பி.கனிமொழி, மணிப்பூர் விவகாரத்தில் தற்போதுவரை மத்திய மற்றும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்,"உலகத்தையே உலுக்கும் வகையில் நடந்துள்ள இந்த மணிப்பூர் பலாத்காரம் மிக பெரும் தலைகுனிவு. பிரதமர் மோடி அனைத்தையும் பார்த்துக்கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
எம்.பி.கனிமொழி பேச்சு
#WATCH | "உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இது மிகப்பெரிய தலைகுனிவு; பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார்?"
— Sun News (@sunnewstamil) July 23, 2023
-சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேச்சு!#SunNews |… pic.twitter.com/LBDkwaBVAp