Page Loader
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானைக்கு 'சிறந்த யானைக்கான' விருது

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானைக்கு 'சிறந்த யானைக்கான' விருது

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2024
05:35 pm

செய்தி முன்னோட்டம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள யானை மங்களத்திற்கு 'சிறந்த யானைக்கான' விருது வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சுறுசுறுப்பான யானைக்கு வழங்கப்படும் விருது இதுவாகும். புது டெல்லியைச் சேர்ந்த லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1982-ம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர் அக்கவோவிலுக்கு மங்களம் என்ற யானையை பரிசாக வழங்கினார். அந்த மங்களம்(53) என்ற யானைக்கு ஊட்டச்சத்துக்கள், உடற்பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மங்களம்(53) தனது யானை பாகன் அசோக்குடன் சேர்ந்து செல்போன் பார்ப்பது, குறும்புத்தனம் செய்வது என குஷியாக சுற்றும் ஒரு யானையாகும். இந்த காரணத்தினாலேயே இணையவாசிகள் மத்தியில் அதன் வீடியோ மிகவும் பிரபலம். இந்நிலையில், அந்த யானையின் சுறுசுறுப்பை பாராட்டி அதற்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மங்களத்திற்கு சிறந்த யானைக்கான விருது