பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தினை சேர்ந்தவர் விபின் குமார்(25), செல்போன் பழுப்பார்க்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.
பணியில் இருந்து வீடு திரும்புகையில் வழியில் தனது நண்பர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக மோமோக்கள் சாப்பிட முடிவு செய்துள்ளனர்.
அவர்களுள் யார் அதிகளவு மோமோக்கள் சாப்பிடுகிறார்கள் என்னும் போட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், விபின் குமார் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.
இதனையடுத்து விபின் குமார் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அதனை கண்டு பதறிய அவரது நண்பர்கள் அவரை தூக்கிக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
மோமோக்கள்
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் மரணமடைந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
அதன்பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபின் குமார் உடலினை பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கியுள்ளனர்.
பிரேத பரிசோதனை குறித்த அறிக்கை வந்த பின்னரே விபின் குமாரின் மரணம் குறித்த காரணம் தெரியவரும் என்று கூறப்படும் நிலையில், விபின் குமாரின் தந்தை அவரது நண்பர்கள் தான் திட்டமிட்டு இது போன்று ஓர் சவால் விடுத்து தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறி வருகிறார்.
ஆனால் சட்டரீதியாக விபின் குமார் குடும்பத்தார் சார்பில் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.