"நாங்கள் தோற்கவில்லை, இது ஜனநாயகப் படுகொலை!": பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மமதா பானர்ஜி
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ள மம்தா பானர்ஜி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் கூட்டுச் சதியாலேயே தனது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "எங்கள் போராட்டம் பாஜகவிற்கு எதிராக அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவே இருந்தது" என்று மமதா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதில் நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே சில பெயர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார். இது ஒரு நேர்மையான தேர்தல் அல்ல என்றும், மக்களின் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
STORY | Won’t resign, poll results not people’s mandate but conspiracy: Mamata
— Press Trust of India (@PTI_News) May 5, 2026
Outgoing West Bengal Chief Minister and TMC supremo Mamata Banerjee on Tuesday ruled out stepping down after her party’s defeat in the assembly polls, claiming that the verdict was not a genuine… pic.twitter.com/SfHYlLcxPE
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
'हम चुनाव हारे नहीं है,चनाव आयोग असली खलनायक,बीजेपी ने EC का इस्तेमाल किया,सारी मशीनरी बदल दी गई'
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 5, 2026
नतीजे आने के बाद ममता बनर्जी की प्रेस कॉन्फ्रेंस #Kolkata #MamataBanerjee #ElectionResults @MamataOfficial pic.twitter.com/Ugd9Apygkt
புகார்கள்
தாக்குதல் மற்றும் வன்முறை புகார்கள்
வாக்கு எண்ணிக்கையின் போது தான் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "மத்தியப் பாதுகாப்புப் படையினர் என்னைத் தள்ளிவிட்டனர், எனது கட்சி ஏஜெண்டுகளை உள்ளே அனுமதிக்கவில்லை" என்று அவர் கூறினார். மேலும், மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தோல்விக்குப் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 'இந்தியா' (INDIA) கூட்டணித் தலைவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மம்தா கூறினார். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து சந்திக்கவுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதில் தான் ஒரு சுதந்திரப் பறவையாகச் செயல்படப்போவதாக அவர் உறுதிபடக் கூறினார்.