LOADING...
'என்னிடம் ஆலோசிக்கவே இல்லை'! மேற்கு வங்க ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்
மேற்கு வங்க ஆளுநராக ஆர்என் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்

'என்னிடம் ஆலோசிக்கவே இல்லை'! மேற்கு வங்க ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
08:20 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க மாநில ஆளுநராக கடந்த 3.5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சிவி ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனது ராஜினாமா குறித்துப் பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் தான் போதுமான காலத்தைச் செலவிட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், பதவி விலகலுக்கான முறையான காரணத்தை அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதிருப்தி

மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி

ஆளுநரின் இந்தத் திடீர் ராஜினாமா குறித்துப் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். "ஆளுநர் ராஜினாமா செய்ததற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் கொடுத்த சில அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே அவர் பதவி விலகியிருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்." என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமித் ஷா

ஆர்என் ரவியை அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்என் ரவி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தன்னிடம் தெரிவித்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதிய ஆளுநர் நியமனம் குறித்து வழக்கமான மரபுகளின்படி என்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ஒரு தகவலாக மட்டுமே இதை என்னிடம் கூறினார். இத்தகைய தன்னிச்சையான முடிவுகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையும், நமது கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையும் சிதைக்கின்றன. மாநிலங்களின் கண்ணியத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்." என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement