Page Loader
ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி 

ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி 

எழுதியவர் Sindhuja SM
Apr 27, 2024
02:51 pm

செய்தி முன்னோட்டம்

வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார். ஹெலிகாப்டர் முன் வைக்கப்பட்டிருந்த நகரக்கூடிய படிக்கட்டுகளில் அவர் நடந்து சென்று, அதன் உள்ளே அமரப் போகும் போது தவறி விழுந்தார். இதனால் மம்தா பானர்ஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் காயமடைந்ததும் உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு உதவினர். பின்னர், அவர் திட்டமிடப்பட்டபடி அசன்சோலுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மே மாதம் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டின் அருகே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நெற்றியில் ஆழமான வெட்டுக் காயம் ஒன்று ஏற்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

காயமடைந்தார் மம்தா பானர்ஜி