பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்
செய்தி முன்னோட்டம்
கடந்த 1999ம்ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன்.
ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் மைத்ரேயனுக்கு அக்கட்சியில் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வந்தது.
மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்த இவர், ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு ஏற்பட்ட கலவரத்தில் சசிகலாவுக்கு எதிராக போராடிய ஓபிஎஸ்'ஸுடன் இணைந்தார்.
பின்னர் சமீபத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக சிறிது காலம் இருந்தநிலையில், மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
இதனால் ஈபிஎஸ் கடந்த அக்டோபர் 9ம்தேதி மைத்ரேயனை அதிமுக'வில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
இதன்பின்னர் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த இவர்,டெல்லி பாஜக தலைமை அலுவலகம் சென்று தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று(ஜூன்.,9)பாஜக'வில் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்!#SunNews | #Maitreyan | #BJP pic.twitter.com/F1KMGdSZYm
— Sun News (@sunnewstamil) June 9, 2023