மகாராஷ்டிராவில் பயங்கர வெள்ளம்: ஆற்றில் மிதந்து வந்த 3,000 கேஸ் சிலிண்டர்கள்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிரக் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு ஆலையின் பாதுகாப்புச் சுவர் வெள்ளத்தில் இடிந்து விழுந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 எல்பிஜி (LPG) காஸ் சிலிண்டர்கள் அப்படியே அருகில் உள்ள பாதாளகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆற்றின் அதிவேக வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான சிவப்பு நிற சிலிண்டர்கள் ஒன்றாகத் திரண்டு மிதந்து வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆற்றில் சிலிண்டர்கள் மிதந்து வருவதைக் கண்ட ஆற்றங்கரை கிராம மக்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்று வெள்ளத்தில் இறங்கிச் சிலிண்டர்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
महाराष्ट्र के रायगढ़ में बाढ़ से LPG बॉटलिंग प्लांट के 3000 से ज्यादा सिलेंडर पानी में बह रह रहे हैं। pic.twitter.com/FVN06SiaLs
— P.N.Rai (@PNRai1) July 9, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
When the Monsoon Offers Express Delivery! 🌧️🤣
— Hyderabad Post (@TheHydPost) July 9, 2026
Nearly 3,000 LPG cylinders floated away into the #Patalganga River after heavy rains flooded an LPG plant in #Raigad, #Maharashtra. pic.twitter.com/gsy0XrxFuK
எச்சரிக்கை
ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜாவ்லே விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
பொதுமக்கள் சிலிண்டர்களைத் திருடிச் செல்வதைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆற்றில் அடித்து வரப்பட்ட சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளதா அல்லது அவை காலியாக உள்ளதா என்பது நமக்கு தெரியாது. வெள்ள நீரில் பாறைகளிலும், தூண்களிலும் மோதி அடித்து வரப்பட்டதால் அவற்றின் தற்போதைய பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாக உள்ளது". "அவற்றின் வால்வுகளைத் திறந்து பார்ப்பது மிகப்பெரிய வெடி விபத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த சிலிண்டர்களைத் தொடக் கூடாது" என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 சிலிண்டர்களில் தற்பொழுது வரை சுமார் 1,000 சிலிண்டர்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரிடமாவது இந்த சிலிண்டர்கள் இருந்தால், அவற்றை உடனடியாக ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.