பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை
மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது, இதனையொட்டி அவர் அடைக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்ட மத்திய சிறையிலுள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள அவரது சிறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மகாகவி பாரதியார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது, 1918ம் ஆண்டு 25 நாட்கள், நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி, அவரின் நினைவாக தற்போது அந்த அறையில் ஒரு நூலகமும், மத்திய சிறை வளாகத்தில் அவரது உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவுநாள் அன்று சிறையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.