தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி, அதன் சட்டமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அந்த நபர் மேலும் கூறியதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. பாஜக கட்சி திங்களன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரை அதன் மகாராஷ்டிர சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக நியமித்தது. அவர்கள் மேற்பார்வையில், எம்.எல்.ஏக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
10 நாட்களாக தலைமையை தீர்மானிக்க திணறும் மாநில கட்சி
கட்சியின் மூத்த நிர்வாகி பிடிஐயிடம், "ரூபானியும், சீதாராமனும் மும்பையில் புதன்கிழமை (டிசம்பர் 4) பாஜகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்திப்பார்கள். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த பார்வையாளர்கள் அடுத்த முதலமைச்சராக வரவிருக்கும் பாஜக தலைவரின் பெயரை அறிவிப்பார்கள்" மகாயுதி அரசின் பதவியேற்பு விழா டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த விஷயத்தில் இதுவரைஅதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றாலும், மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
இதற்கிடையில், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மேலிடத்திற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். என்ன முடிவெடுத்தாலும் அவரும் தனது கட்சியும் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார். முதல்வர் பதவிக்கு பாஜகவிற்கு தடையாக இருக்க மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தினார். பாஜகவுடனான மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய இரு கட்சிகளும் புதிய அரசாங்கத்தில் துணை முதல்வர் பதவியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக வந்த வதந்திகளை நிராகரித்த ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த், "அதிகாரத்தில் பதவிக்கு ஆசைப்படவில்லை" என்று தெளிவிவுபடுத்தினார்.