Page Loader
ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 
உயிர் சேதாமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

எழுதியவர் Sindhuja SM
Aug 05, 2023
11:21 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம்(NCS) இன்று காலை 8:36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. குல்மார்க்கிலிருந்து சுமார் 184-கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 129-கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால், உயிர் சேதாமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, ஜூலை 10ஆம் தேதி அதிகாலை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூன் 13அன்று தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட இன்னொரு நிலநடுக்கத்தால், வீடுகள் உட்பட டஜன் கணக்கான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்