Loading...
மதுராந்தகம், தாராபுரத்தில் களம் காணும் 49 வேட்பாளர்கள்; தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியானது

மதுராந்தகம், தாராபுரத்தில் களம் காணும் 49 வேட்பாளர்கள்; தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
06:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, பரிசீலனை மற்றும் மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 49 பேர் களத்தில் உள்ளனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டி

மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் 5 பிரதான வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் 22 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 27 பேர் இங்குப் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம்

தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டி

தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பி.சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வேட்பாளர்களுடன் 17 சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்பதால், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ஐந்து முனைப் போட்டி

ஐந்து முனைப் போட்டியும் தேர்தல் பிரச்சாரச் சூடும்

முக்கிய திராவிடக் கட்சிகளான தவெக, திமுக, அதிமுக ஆகியவற்றுடன் நாம் தமிழர் மற்றும் தனித்துக் களம் காணும் இடதுசாரி கட்சிகள் போட்டியிடுவதால் இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ADVERTISEMENT