தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம், சூரக்குளத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த இவருக்கு ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 56 மதிப்பெண், இயற்பியல் 75 மதிப்பெண், வேதியல் 71 மதிப்பெண், உயர் கணிதம் 82 மதிப்பெண் பெற்றதாக வெளியாகியுள்ளது. இதனால், 600 க்கு 514 மதிப்பெண் எடுத்தும் நான்கு பாடங்களில் பெயில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவி புகார் அளிக்க இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.