
பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
செய்தி முன்னோட்டம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான "கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்", இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பச்சை பட்டுடன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகரை, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் வரவேற்றனர்.
மே 10ஆம் தேதி அழகர்கோயிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு, நேற்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.
இன்று கருப்பணசுவாமி கோயிலில் இருந்து பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்பட்டார்.
வழியிலெல்லாம் பக்தர்கள் தண்ணீர் பீச்சியும், சர்க்கரை தீபங்களும் ஏற்றி அவரைத் தரிசித்தனர்.
நாளைய நிகழ்வுகள்
மதுரையில் நாளைய நிகழ்வுகள்
வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்றார்.
நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
நாளை, மே 13ஆம் தேதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்பட்டு, கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிப்பார்.
பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும்.
பிற்பகலில், ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
— Sun News (@sunnewstamil) May 12, 2025
கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.#SunNews | #Kallazhagar | #ChithiraiThiruvizha pic.twitter.com/gGx8haNGWQ