Page Loader
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செங்கோலை கைம்பெண் வாங்ககூடாதா?: மதுரை பெஞ்ச் கேள்வி
மீனாட்சியின் செங்கோலை பெறுவது மரபு மட்டுமின்றி அறங்காவலரின் தனிப்பட்ட கௌரவமும் கூட

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செங்கோலை கைம்பெண் வாங்ககூடாதா?: மதுரை பெஞ்ச் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2024
05:32 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அறங்காவலர், சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகத்தில், அவள் சார்பாக செங்கோல் பெற்றுக்கொள்வது மரபு. இதுநாள் வரை மீனாட்சி அம்மன் கோவிலின் அறங்காவலராக மறைந்த தொழிலதிபர் திரு.கருமுத்து கண்ணன் செயல்பட்டு வந்தார். அவரின் மறைவிற்கு பின்னர் திருமதி. ருக்மணி பழனிவேல் ராஜன் அறங்காவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், ருக்மணி கைம்பெண் என்பதால் அவருக்கு செங்கோல் தரக்கூடாது என்றும், வேறு தகுதியான நபரிடம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பெஞ்ச்,"கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்க கூடாது என எந்த ஆகம வீதியில் உள்ளது? செங்கோல் வாங்குபவரும் ஹிந்து தானே?" எனக்கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தது.

embed

மீனாட்சி கோவில் செங்கோல் யாருக்கு?

#BREAKING | மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கணவரை இழந்தோர் செங்கோல் பெற தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி#SunNews | #Madurai | #ChithiraiThiruvizha pic.twitter.com/mS6c8bJy9K— Sun News (@sunnewstamil) April 16, 2024