NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.

    கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர் மீதும் இவரது மனைவி மீதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கினை மேல்முறையீடு செய்தனர்.

    மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

    வழக்கு 

    தண்டனை குறித்த விவரங்கள் வரும் 21ம் தேதி தெரிவிக்கப்படும் - நீதிபதி 

    அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 39 சாட்சியங்களிடம் மேற்கொண்ட புலன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் உண்மைத்தன்மை இல்லை என்று அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று(டிச.,19) இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அத்தீர்ப்பின் படி, 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

    அதனால் அமைச்சர் பொன்முடியின் விடுதலை செல்லாது என்று கூறி நீதிபதி அவரது விடுதலையை ரத்து செய்துள்ளார்.

    மேலும் வரும் 21ம் தேதி இவ்வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் காலை 10.30 மணியளவில் தெரிவிக்கப்படும் என்று கூறிய நீதிபதி,

    அன்று அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    உயர்கல்வித்துறை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    திமுக

    சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு  மு.க ஸ்டாலின்
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  தமிழ்நாடு
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி

    சென்னை உயர் நீதிமன்றம்

    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு தமிழ்நாடு
    புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்  முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025