மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். பொது தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது வருடமாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். எனவே, தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்வின் சாதனையை இன்று சமன் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், அவர் இடைக்கால பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தவுடன், நிதி மசோதா 2024 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாளை பகல் 11 மணிக்கு அவை மீண்டும் கூடவுள்ளது.