NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை 
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை 
    இந்தியா

    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை 

    எழுதியவர் Nivetha P
    May 10, 2023 | 07:00 pm 1 நிமிட வாசிப்பு
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை 
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை

    தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம்தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கரூரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் வைகாசி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் மே மாதம் 14ம்தேதியே வைகாசி பெருவிழா அந்த கோயிலில் துவங்கப்படவுள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி மே மாதம் 31ம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டே அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போது பொதுமக்கள் அந்த விழாவில் பங்குகொள்வதற்காக உள்ளூர் விடுமுறை அந்த குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Twitter Post

    #JUSTIN | கரூர் மகாமாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வரும் 31ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    இதற்கு மாற்றாக ஜூன் 03ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு#SunNews | #Karur | #LocalHoliday

    — Sun News (@sunnewstamil) May 10, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவிழா
    தமிழ்நாடு

    திருவிழா

    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  தமிழ்நாடு
    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திண்டுக்கல்
    புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பண்டிகை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்  மதுரை

    தமிழ்நாடு

    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம் விஜய்
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!  உதயநிதி ஸ்டாலின்
    அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்  அமைச்சரவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023