நிதிஷ் அணி தாவக்கூடும் என லாலுவும், தேஜஸ்வியும் முன்பே கணித்துக் கூறினர்: கார்கே
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அது நடக்கும் என்று தனக்கு முன்பே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். "முன்பு அவருக்கும் எங்களுக்கும் சண்டை. லாலு ஜி மற்றும் தேஜஸ்வியிடம் பேசியபோது அவர்களும் நிதிஷ் போக போகிறார் என்று சொன்னார்கள். அவர் இருக்க விரும்பி இருந்தால், அவர் இருந்திருப்பார், ஆனால் அவர் செல்ல விரும்புகிறார். இது எங்களுக்கு முன்பே தெரியும், இந்த தகவல் ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் மூலம் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று அது உண்மையாகிவிட்டது." என்று கார்கே கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் vs ராஷ்ட்ரிய ஜனதா தளம்
ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். நிதிஷ் குமார் , 'இண்டியா' கூட்டணியை விடுத்து, பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார். பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கூட்டணியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே பதட்டம் நிலவி வந்த நிலையில், இந்த வாரம், மத்திய அரசு, சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை அடுத்து, அது மேலும் சூடு பிடித்துள்ளது.