'என் மகனைக் கடத்தினார்கள்; 3 முறை கொலை செய்ய முயன்ற தாவூத் இப்ராஹிம்': லலித் மோடி பகீர் வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விலகி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் தொடரின் முன்னாள் ஆணையர் லலித் மோடி, தான் கிரிக்கெட் உலகை விட்டு நிரந்தரமாக விலகியதன் பின்னணியில் இருந்த திடுக்கிடும் ரகசியத்தை முதன்முறையாக உடைத்துள்ளார். நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்களே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஐபிஎல் தொடரின் ஆரம்பக் காலங்களில் சூதாட்டத்தைத் தடுக்கத் தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே, மாஃபியா கும்பல் தனக்கு எதிரியாக மாற காரணம் என்று லலித் மோடி விவரித்துள்ளார்.
சூதாட்டம்
ஒவ்வொரு பந்துக்கும் மாறும் ₹33,000 கோடி சூதாட்ட சந்தை
தாவூத் இப்ராஹிம் ஒரு சர்வதேச புக்மேக்கர் என்று சாடியுள்ள லலித் மோடி, கிரிக்கெட் சூதாட்ட உலகை அவனே கட்டுப்படுத்துவதாகக் கூறினார். "நான் ஐபிஎல் நடத்திய ஆரம்ப நாட்களில் ஒரு போட்டிக்கு 2 பில்லியன் டாலர் அளவிற்கு சட்டவிரோத சூதாட்டம் நடந்தது. ஆனால் இன்று அது ஒரு போட்டிக்கு 4 பில்லியன் டாலராக (சுமார் ₹33,000 கோடி) உயர்ந்துள்ளது. இது கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்ட சந்தை. இப்போது யாரும் ஒட்டுமொத்த மேட்சையும் பிக்ஸ் செய்வதில்லை. மாறாக, ஸ்பாட் பிக்சிங் எனப்படும் ஒரு குறிப்பிட்ட ஓவர் அல்லது ஒரு குறிப்பிட்ட பந்தை மட்டுமே பிக்ஸ் செய்கிறார்கள்" என்று மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
சிக்னல்
வீரர்கள் சிக்னல் கொடுப்பதை வைத்து பேரம்
மைதானத்தில் இருக்கும் வீரர்கள் கைகுட்டையை வெளியே எடுப்பது, தலையை ஒருபுறமாகத் தேய்ப்பது போன்ற மிகச் சாதாரண சைகைகள் மூலம் புக்மேக்கர்களுக்கு சிக்னல் கொடுக்கப்படுவதாகவும், இதனைத் தான் தீவிரமாகக் கண்காணித்து அத்தகைய நபர்களை மைதானத்தை விட்டே துரத்தியதால் மாஃபியா கும்பலுக்குத் தன் மீது கடுமையான கோபம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் சமரசம் பேச மாஃபியாக்கள் பல நூறு மில்லியன் டாலர்களை ஆஃபர் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை முயற்சி
3 முறை கொலை முயற்சி; லண்டனில் மகன் கடத்தல்
மாஃபியாக்களின் கோடிக்கணக்கான டாலர் ஆஃபர்களை நிராகரித்ததால், தாவூத் இப்ராஹிம் தன்னைத் தீர்த்துக்கட்ட மூன்று முறை திட்டமிட்டதாக லலித் மோடி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். "மும்பை போலீசார் எனக்குத் திடீரென இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்தனர். மும்பையில் என் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜோகன்னஸ்பர்க்கில் என்னைக்கொல்ல ஸ்கெட்ச் போடப்பட்டது. பின்னர் கேப்டவுனில் நான் இருந்தபோது தென்னாப்பிரிக்க அரசு என்னைக் காப்பாற்றியது. மாண்டினீக்ரோவிலும் எனக்கு எதிராகக் கொலை முயற்சி நடந்தது. இதுமட்டுமன்றி, லண்டனின் ஸ்லோன் ஸ்ட்ரீட்டில் வைத்து என் மகனை பாபா அவின் என்பவன் கடத்தினான்" என்று லலித் மோடி அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 SMITA PRAKASH : Why you left IPL?
— News Algebra (@NewsAlgebraIND) June 4, 2026
LALIT MODI : "I have never told this story to anyone. In 2012, I received a call at 3:30 am while I was at a mysterious Baba's penthouse"
"It was Dawood Ibrahim" 😳
"I don't know where Dawood was when I spoke to him on the phone"
"Dawood… https://t.co/I2gJ9dYOFT pic.twitter.com/BxOOpTvSGO