Page Loader
100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 

எழுதியவர் Nivetha P
Sep 03, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் பழமை மாறாமல் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(செப்.,3) இந்த திருக்கோயிலின் குடமுழுக்கு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பரவசமடைந்தனர். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிரம சோழ மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு ஆதி சரபமூர்த்தி தனி சன்னதியிலும், துர்க்கை அம்மன் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர் மோர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

குடமுழுக்கு விழாவில் மத நல்லிணக்கம்