Page Loader
யூ-ட்யூப் பார்த்து வீட்டில் பிரசவித்த பெண் உயிரிழப்பு - மகப்பேறு மருத்துவர் கூறுவது என்ன 
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவித்த பெண் உயிரிழப்பு - மருத்துவர் விளக்கமளித்து பேட்டி

யூ-ட்யூப் பார்த்து வீட்டில் பிரசவித்த பெண் உயிரிழப்பு - மகப்பேறு மருத்துவர் கூறுவது என்ன 

எழுதியவர் Nivetha P
Aug 23, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு:கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியினை சேர்ந்த லோகநாயகிக்கும், தர்மபுரியை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021ம்ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவி லோகநாயகி கருவுற்றுள்ளார். ஆனால் மாதேஷ் தனது மனைவியினை மருத்துவமனைக்கு பரிசோதனைகளுக்கு அழைத்துச்செல்லாமல் இருந்துள்ளார். அப்பகுதி சுகாதாரநிலைய செவிலியர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி, சத்து-மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியும், மாதேஷ் அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லையாம். இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்.,23)அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே, வீட்டிலேயே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, யூடியூப் உதவியோடு பிரசவம் பார்த்துள்ளார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்து வெகுநேரமாகியும் நச்சுக்கொடி வெளியே வராமலிருந்த நிலையில், சுயநினைவினை இழந்த லோகநாயகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கலைவாணி விளக்கமளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவரின் தெளிவான விளக்கம்