அயோத்தி ராமர் அணிந்துள்ள நகைகளை பற்றி சில தகவல்கள்
ஜனவரி 22 ஆம் தேதி, அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'பாலக் ராம்' சிலை, ஆடை ஆபரணங்களுடன் கொள்ளை அழகில் இருந்தது என நேரில் கண்டவர்கள் மெய்சிலிர்த்து கூறினர். சரி, ராமர் அணிந்துள்ள ஆபரணங்கள் என்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை, நாம் தெரிந்து கொள்வோம். கிரீடம்: ராமர் சிலை அணிந்துள்ள கிரீடம், 22 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. இது தோராயமாக 1.7 கிலோ எடை கொண்டது. இந்த கிரீடத்தில் 75-காரட் வைரங்கள், 175-காரட் ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் 262-காரட் மாணிக்கங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ராமர் திலகம்: ராமர் திலகம், 16 கிராம் தங்கத்தால் ஆனது. இதன் மையத்தில் மூன்று காரட் வைரங்கள், இருபுறமும் 10 காரட் வைரங்கள் நடுவில் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வைரம், வைடூரியம் நிறைந்த ராமரின் அணிகலன்கள்
வில்-அம்பு: தங்கத்தினால் ஆன வில்-அம்பில், முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்ககள் அலங்கரிக்கப்பட்டுள்ளது காப்பு: கைகளில் அணிந்துள்ள தங்க காப்பில் ரத்தினங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. ஒட்டியாணம்: இடுப்பில் அணியும் ஐந்து இழைகள் கொண்ட இந்த அபரணத்தில், வைரங்கள் மற்றும் மரகதங்களால் ஆன பெரிய, அலங்கரிக்கப்பட்ட பதக்கம் பாதிக்கப்பட்டுள்ளது ஆடை: பனாரசி துணியால் நெய்யப்பட்ட மஞ்சள் நிற வேட்டி மற்றும் சிவப்பு அங்காவஸ்திரம், தூய தங்க ஜரி மற்றும் நூல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது கௌஸ்துப மணி: ராமரின் நெஞ்சு பகுதியை அலங்கரிக்கும் இந்த அபரணத்தில், பெரிய மாணிக்க கல்லும், சுற்றிலும் வைரமும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொலுசு: தங்க கொலுசில், வைரமும், மாணிக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயமாலை: தங்கத்தால் செய்யப்பட்ட நீளமான நெக்லெஸில், மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டு வெற்றியின் அடையாளமாக அணிந்துள்ளனர்