Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு
இன்று மதியம், பெங்களூருவில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, சூரிய ஒளி பட்டாலும், செங்குத்தான பொருட்களின் நிழல் தரையில் விழாது. இந்த நிகழ்விற்கு பெயர் தான், Zero Shadow Day. இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது, எவ்வாறு தோன்றுகிறது என்பது குறித்து மேலும் சில தகவல்கள் இதோ: நண்பகலில் சூரியன் ஒருபோதும் சரியாக மேல்நோக்கிச் இருக்காது. சற்றே, வடக்கே அல்லது சிறிது தெற்கே தான் இருக்கும். இருப்பினும், "23.5 மற்றும் -23.5 டிகிரி அட்சரேகைகளுக்கு(latitude) இடையில் வாழும் மக்களுக்கு, பூமியின் சுழற்சி காரணமாக, இரண்டு முறை அவர்களின் அட்சரேகைக்கு சமமாக, சூரியன் இருப்பு இருக்கும்," என்று இந்திய வானியல் சங்கம் (ASI) தெரிவித்துள்ளது.
Zero Shadow Day
"இந்த இயற்கையின் அதிசயம் இரண்டு முறை நிகழும். ஒரு முறை உத்தராயணத்தின் போது, ஒரு முறை தட்சிணாயனத்தின் போதும்" என்று ASI மேலும் தெரிவித்துள்ளது. "இந்த இரண்டு நாட்களிளிலும், சூரியன் நண்பகலில், சரியாக மேலே இருக்கும். அதனால், தரையில் செங்குத்தான பொருட்களின் நிழல் படாது." அதன்படி மதியம் 12.17 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள். பெங்களூருவில் இன்று மட்டுமல்லாது, வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதியும், இந்த அதிசய நிகழ்வு நடைபெறும். பொதுமக்கள் இந்த அரிய நிகழ்ச்சியை காண, இந்திய வான் இயற்பியல் வளாகத்தில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.