Loading...
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த ஆழியார் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ஜாகீர், மனநல பாதிப்பு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி பொள்ளாச்சி கிளை சிறையிலிருந்து மாற்றப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி அங்கு சிகிச்சையில் இருந்த அரவிந்த்சாமி என்ற மற்றொரு மனநலன் பாதிக்கப்பட்ட கைதி, ஜாகீரைக் கைகளால் கண்ணில் கொடூரமாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

உயிரிழப்பு

தீவிர விசாரணை மற்றும் மருத்துவமனை பலனின்றி உயிரிழப்பு

சக கைதியின் கொடூரத் தாக்குதலால் ஆபத்தான நிலையில் காயமடைந்த ஜாகீர், உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனநல மருத்துவமனையில் பாதுகாப்பில் இருந்த கைதி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாகத் தலைமைச் செயலகக் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் அங்கு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT