Page Loader
கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு
கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

எழுதியவர் Nivetha P
Feb 21, 2023
12:45 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவுசின்னம் ஒன்றினை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்ததோடு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கடுமையாக பேசியது பரபரப்பினை ஏற்படுத்தியது.

மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

34 பேரின் கருத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 12 பேர் எதிர்ப்பு

இதற்கிடையே, நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள், சுற்றுசூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பு ஒன்றினை தயாரித்துள்ளது. இதில் 34 பேரின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் படி, பேனா நினைவு சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை விவரம் தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கேட்பு கூட்ட அறிக்கையானது விரைவில் தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த கருத்துக்களின் அடிப்படையில் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்து மத்திய அரசிடம் சமர்பிக்கடவுள்ளது என்றும் கூறப்படுகிறது.