Page Loader
கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி! 
ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!

கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி! 

எழுதியவர் Arul Jothe
May 17, 2023
10:17 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூர்-சிக்மகளூர் வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, தாய் மற்றும் கைக்குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் பேருந்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. வேகமாகச் செயல்பட்ட எஸ்.வசந்தம் என்ற பெண் நடத்துனர், உடனடியாக ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு கேட்டு, பயணிகளை இறங்கச் சொன்னார். பின்னர் அந்தப் பெண்ணுக்குப் பேருந்திலேயே குழந்தையைப் பிரசவிக்க உதவினார்.

Pregnant Lady Gives birth in bus

மனிதாபிமான செயல்

அந்தப் பெண் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதை உணர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஒன்று கூடி ரூ.1500 பணத்தை தாயிடம் கொடுத்து உதவியுள்ளனர். இதையடுத்து, அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜி. சத்தியவதி, நடத்துனரின் மனிதாபிமான சேவையைப் பாராட்டினார். குழந்தை மற்றும் தாய் இருவரின் உயிரைக் காப்பாற்றிய பெண் நடத்துனரின் மனிதாபிமான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று ஜி. சத்தியவதி தெரிவித்துள்ளார்.