LOADING...
₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல்
ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல்

₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2025
11:18 am

செய்தி முன்னோட்டம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனக்கு சுமார் ₹300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கமல்ஹாசன் திமுக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுக நான்கு இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இவர்களில் கமல்ஹாசனும் ஒருவர் ஆவார். மற்ற திமுக வேட்பாளர்களில் எம்பி பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் அடங்குவர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரை அதிமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சொத்து

சொத்து விபரம்

கமல்ஹாசன் சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, 2023-24 நிதியாண்டிற்கான அவரது வருமானம் ₹78.90 கோடியாக இருந்தது. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு ₹59.69 கோடி மற்றும் அவரது அசையா சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு ₹245.86 கோடி ஆகும். சொத்துக்கள் தவிர, அவர் ₹49.67 கோடி கடன்களையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மஹிந்திரா பொலேரோ, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் லெக்ஸஸ் ஆகிய நான்கு சொகுசு வாகனங்களை சொந்தமாக வைத்துள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ₹8.43 கோடி என்றும் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கையில் உள்ள ரொக்கப் பணம் ₹2.60 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.