Page Loader
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2024
08:13 am

செய்தி முன்னோட்டம்

கடந்த வாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இது வரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் விசாரணை CBCID க்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய புலனாய்வு அமைப்பு, ஏற்கனவே பலரை கைது செய்துள்ளது. விஷசாராயம் காய்ச்சிய வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபரான சிவகுமாரை சென்னையில் வைத்து கைது செய்தனர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மெத்தனாலை ஆந்திரா மற்றும் மாதவரத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடத்தி செல்ல உதவியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தொடரும் கைதுகள்