
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.
இந்த திட்டத்தில் பயனடைய தகுதியானோரை தேர்வு செய்வதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்களை பெற தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டது.
சென்னையில் மட்டும் இதுவரை 17.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
2 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களில், முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டும் சேர்த்து 1 கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம்
குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
மேலும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக நடத்தப்பட்ட 3ம் கட்ட சிறப்பு முகாமில் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சிறப்பு முகாம்கள் நேற்றோடு(ஆகஸ்ட்.,21)மூடப்பட்ட நிலையில், மொத்தம் 1 கோடியே 55 லட்சம் பேர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பதியப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த திட்டத்திற்கு தகுதியானோரை தேர்வு செய்வதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இம்மாத இறுதிக்குள் இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த பரிசீலனை முடிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து தெரியவருமாம்.
இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.