மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்? முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு முதலமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மே மாதத்திற்கான உரிமைத் தொகை விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பிப்ரவரி மாதமே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை என மொத்தம் ரூ. 5,000 பயனாளிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு
முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகம் மே 10 அன்று ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடருமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இந்த உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குச் சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது." "இருப்பினும், மே 2026 மாதத்திற்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மிக விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்." திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் வருமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு#CMJosephVijay pic.twitter.com/O7elApfEsB
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 14, 2026