வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.
ஜேபிசியின் தலைவர் ஜகதாம்பிகா பால், பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிக்கையை சமர்பிப்பார்.
மேலும், குழு முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் பதிவுகளும் சமர்ப்பிக்கப்படும்.
முன்னதாக, இந்த அறிக்கை ஜனவரி 30 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை சமர்ப்பித்த போதிலும், ஜேபிசி வரைவு அறிக்கையை ஏற்று ஜனவரி 29 அன்று சில திருத்தங்களை அங்கீகரித்தது.
திருத்தங்கள்
25 திருத்தங்கள்
வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக முதலில் இயற்றப்பட்ட வக்ஃப் மசோதா, 1995 இல் 14 ஷரத்துகளில் 25 திருத்தங்களை இக்குழு செய்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் டிஜிட்டல் மயமாக்கல், மேம்படுத்தப்பட்ட தணிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த முயல்கின்றன.
திருத்தங்கள் குறித்து பேசிய ஜேபிசி தலைவர் ஜகதாம்பிகா பால், முதன்முறையாக வக்ஃப் சலுகைகள் ஏழைகள், பெண்கள் மற்றும் அனாதைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அன்றைய தினம், இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்த் பல்கலைக்கழகத்தை திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகம் என்று பெயரிடும் மசோதாவை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.