ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நேற்று இரவு 8:00 மணியளவில் ஜார்க்கண்டில் உள்ள குமான் ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்தது. அந்த ரயிலின் இன்ஜினில் தீப்பற்றியதாக வதந்தி கிளம்பியதை அடுத்து, பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. இதனால் பயத்தில் சிலர் அருகில் இருந்த பாதையில் குதித்தனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த சரக்கு ரயிலில் அவர்கள் விழுந்து உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் பணி தொடர்கிறது
பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உடனடியாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். "விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். தேடுதல் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, தற்போதைக்கு மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன," என்று லதேஹர் துணை ஆணையர் சிங் கூறியுள்ளர். காயமடைந்தவர்களில் ஒரு தாயும் அவரது மகளும் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டால் ஒலிக்கும் மணி ஏன் திடீரென ஒலித்தது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.