பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 17 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இவை செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை வரும் நிலையில், அடுத்து வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் வேலை நாளாக இருக்கும் நிலையில், அன்றும் விடுமுறை வேண்டும் என சொந்த ஊர் செல்பவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஜனவரி 25 அன்று வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
embed
அரசு விடுமுறை
#BREAKING | 17ம் தேதி அரசு விடுமுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு... pic.twitter.com/ZEHZ1vQWHv— Thanthi TV (@ThanthiTV) January 4, 2025
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கூடுதல் விடுமுறை
இது ஒருபுறமிருக்க, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் விமரிசையாக நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக ஜனவரி 13 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு செல்வார்கள் என்பதால், அன்று மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி நீண்ட விடுமுறை கிடைக்க உள்ளது.