குதிரை பேர விவகாரம்: திமுகவின் ரகசியத்தை உடைத்த IUML அமைச்சர் ஷாஜகான்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் IUML எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா ஆகியோர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சையத் பாரூக் பாஷா, விஜய் முதலமைச்சராகிவிடக் கூடாது என்பதற்காக தங்களையும் தங்களது கட்சியையும் திமுகவினர் கோடி கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக மிரட்டியதாகக் கூறினார். மே 7-ஆம் தேதி அதிமுக தலைவரை முதலவராக்க திமுக திட்டமிட்டதாகவும், ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை ஆதரிக்க முடியாது என தங்களது தலைவர் காதர் மொய்தீன் மறுத்துவிட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திமுகவினர் பரப்பும் தகவல்கள் முற்றிலும் திரித்து கூறப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
IUML MLA Syed Farooq Basha clarifies that his Tiruvannamalai speech was completely misrepresented!
— George (@georgeviews) September 7, 2026
He states that DMK and AIADMK attempted to form a government with AIADMK taking the CM post, but IUML refused to compromise its ideology for crores of money.
Hey fake news… pic.twitter.com/MmzOzNGAQG
அமைச்சர் ஷாஜகான்
"ஹோட்டலில் சிறைபிடிப்பு": அமைச்சர் ஷாஜகான்
இவ்விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெளிவுபடுத்திய அமைச்சர் ஷாஜகான், "மே 8-ஆம் தேதி எங்கள் இருவரையும் ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார், காவல் காத்தது யார் என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளியே சொன்னால் திமுகவினரால் அரசியலே செய்ய முடியாது" எனக் கடுமையாகச் சாடினார்.
மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவளித்ததாகவும், தற்போது தவெக லஞ்சமற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Big revelation by IUML MLA Shahjahan:
— George (@georgeviews) September 7, 2026
"The DMK made active efforts on May 7 to prevent a TVK government from forming.
Out of respect, I am refraining from naming those who confined two IUML MLAs in a hotel after 10 PM on May 8, threatened them, and placed them under guard."… pic.twitter.com/Ki1ZMdx03f
விசாரணை
விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இவ்விவாதத்தின் இடையே குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இரண்டு IUML எம்.எல்.ஏ-க்களும் அடைத்து வைக்கப்பட்ட இடம் அக்கார்டு ஹோட்டல் ஆகும். அது திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமானது. இந்தச் சம்பவம் குறித்து அரசு உரிய விசாரணை நடத்தும்" எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Minister @AadhavArjuna :
— George (@georgeviews) September 7, 2026
"Two IUML MLAs were confined at Accord Hotel, which is owned by DMK MP Jagathrakshakan!
So, who confined them?
It was DMK that indulged in horse-trading. Soon, an inquiry will be conducted to uncover the truth." https://t.co/Nqj19aFuNy pic.twitter.com/BcwpM9yGc1