அதிர்ச்சி; கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் ஹோம்ஸ்டே உரிமையாளர் ஆகியோர் மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள துங்கபத்ரா இடது கரை கால்வாய் அருகே ஹோம்ஸ்டே உரிமையாளர் ஒரு இஸ்ரேலிய பெண் உள்ளிட்ட நான்கு பேருடன் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறை அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெட்ரோல் வேண்டும் எனக் கூறி, அவர்களிடம் சென்று, பின்னர் பணம் கேட்டனர்.
ஆனால், பணம் கொடுக்க மறுத்ததால் அவர்கள் பயணிகளைத் தாக்கி, மூன்று ஆண்களை கால்வாயில் தள்ளிவிட்டு, பின்னர் பெண்களைத் தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவர் பலி
கால்வாயில் தள்ளிவிடப்பட்ட மூவரில் ஒருவர் பலி
குற்றவாளிகளால் கால்வாயில் தள்ளிவிடப்பட்ட மூவரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொருவர் தப்பி கரை சேர்ந்தனர்.
ஆனால் ஒடிஸாவைச் சேர்ந்த மற்றொரு நபர் நீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் மறுநாள் காலை மீட்கப்பட்டது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராம் எல் அரசிட்டி உறுதிப்படுத்தினார்.
பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.