IRCTC இணையதளம் முடக்கம்; மாற்று வழிகளை அறிவித்த ரயில்வே துறை
பொதுவாக ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பலரும் இந்திய ரயில்வே துறையின் IRCTC இணையத்தளத்தை தான் பயன்படுத்திகிறார்கள். வெகு அரிதாகவே ரயில்வே ஸ்டேஷனிற்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்கிறார்கள். தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த செயலி இன்று முடங்கியதால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளானர். குறிப்பாக, இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய நிபுணர் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற AI Chat வசதியை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அமேசான், மேக் மை டிரிப் உள்ளிட்ட மாற்று இணையதளங்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.