தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் அருகே உள்ள மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி செலவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடற்பசு இனங்கள் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. எனினும், இந்த இனங்களின் எண்ணிக்கை வாழ்விட இழப்பினால் கடுமையாக குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் சுமார் 240 கடற்பசுக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது., அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, பாக்விரிகுடா பகுதியில் "கடற்பசு பாதுகாப்பகம்" அமைக்க தீர்மானித்து, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.
செயல்முறை அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் முழுவதுமாக 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பொதுமக்களுக்கு அனுமதி உள்ள பகுதி பகுதி அளவு பொதுமக்களுக்கு அனுமதி உள்ள பகுதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி இந்த மையத்தில், கடல் பசு வடிவிலான அருங்காட்சியகம், 4D அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி மற்றும் மிகப்பெரிய முகப்பு போன்ற வசதிகள் அமையவுள்ளது. 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையம், கடற்பசு இனங்களை பாதுகாக்கும் முக்கிய நிலையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.