LOADING...
ரயில் பயணத்தில் புதிய மாற்றம் விரைவில்; 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்
புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது

ரயில் பயணத்தில் புதிய மாற்றம் விரைவில்; 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2025
12:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளை மையமாகக் கொண்டு ஒரு முக்கியமான புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இனிமேல், ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்படும் என்ற புதிய திட்டம், மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம், பயணிகள் தங்கள் பயணத்தில் தேவையான மாற்றங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கும், பயண திட்டங்களை மேம்படுத்துவதற்கும் அதிக வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள நடைமுறையின்படி, பயணிகள் பட்டியல் ரயில் புறப்படும் 4 மணிநேரத்திற்கு முன்பு தான் வெளியிடப்படும். இதனால் பயணத்தின் கடைசி நேரத்தில் மட்டுமே பயணர் தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post