
மசினகுடி வந்தடைந்தார் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு
செய்தி முன்னோட்டம்
நீலகிரி-முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தரவுள்ள இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(ஆகஸ்ட்.,5)காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றார்.
அதன்பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியிலுள்ள ஹெலிபேடில் வந்திறங்கியுள்ளார்.
அங்கிருந்து கார்மூலம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று வளர்ப்பு யானைகளை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பொம்மன்-பெல்லி தம்பதிகளை சந்தித்து பேசியப்பின்னர், மீண்டும் மைசூருக்கு திரும்புகிறார்.
இதனிடையே மீண்டும் இரவு சென்னைக்கு வரும் இவர் கவர்னர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது.
தொடர்ந்து நாளை(ஆகஸ்ட்.,6)சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பாருக்கு புதிய பெயர்சூட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மசினகுடியில் ஜனாதிபதி முர்மு
#VISUALS | முதுமலை தெப்பக்காடு யானைகளை முகாமை பார்வையிடுவதற்காக, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!#SunNews | #DroupadiMurmu | #Mudumalai | @rashtrapatibhvn pic.twitter.com/yqvPZRXgwc
— Sun News (@sunnewstamil) August 5, 2023